அட்லீ-ஷாருக்கான் படத்தின் தலைப்பு இதுதான்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
அட்லீ, ஷாருக்கான்
அட்லீ, ஷாருக்கான்
Published on

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. 

அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com