பூஜையுடன் துவங்கிய ஆர்யாவின் மகாமுனி

‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று துவங்கியது. #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
பூஜையுடன் துவங்கிய ஆர்யாவின் மகாமுனி
Published on

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘மகாமுனி’.

ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் திரில்லர் பாணியில் ‘மகாமுனி’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சக்திவேலன்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com