‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ - சீக்ரெட்டை வெளியிடும் ஆர்யா

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி வரும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் சீக்ரெட் ஒன்றை நடிகர் ஆர்யா நாளை வெளியிட இருக்கிறார்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ - சீக்ரெட்டை வெளியிடும் ஆர்யா
Published on

`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். 

இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். 

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் `கஜினிகாந்த்' படத்தில் ஆர்யா நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com