விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் ஆர்யா - சாயிஷா

ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் - சாயிஷா, ஆர்யாவை விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் என்று கூறியிருக்கிறார்.
விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் ஆர்யா - சாயிஷா
Published on

ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. ‘ஹரிஹர மகாதேவி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இதை இயக்குகிறார்.

இந்த படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி நடித்த பாத்திரத்தை நினைவூட்டும் வகையில் ஆர்யா வேடமிட்டிருந்த காட்சி புகைப் படமாக இடம் பெற்றிருந்தது.

‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் தொடங்கி இருக்கிறது. இதில் சுதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புக்காக ஆர்யாவும், சாயிஷாவும் படக்குழுவுடன் தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது ஆர்யாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று எடுத்த படத்தை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அதில் ஆர்யா பற்றி, ‘விளையாட்டும், அன்பும் நிறைந்த நடிகருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com