கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் ஆர்யா நடனம் ஆடியுள்ளார்.
கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்
Published on

கவுதம் கார்த்திக் -வைபவி நடித்து வரும் படம் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’.  இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்துடன் ‘கஜினிகாந்த்’ படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதையும் ஜெயக்குமார் தான் இயக்குகிறார். 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிகர் ஆர்யாவும் நடனம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து ஆர்யா கூறுகையில், “ஒரு நாள், இயக்குனர் ஜெயக்குமார் திடீர் என்று என்னை ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துச்சென்றார். திடீர் என்று கவுதம் கார்த்திக் உடன் என்னையும் நடனம் ஆட வைத்து விட்டார்.

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. என்னைப்போலவே இயக்குனருக்கும் அந்த எண்ணம் இல்லை. திடீர் என்று எடுத்த முடிவு தான். கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடனம் ஆடியது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com