

இதில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை சித்திக் இயக்குகிறார். அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.