ரிலீசுக்கு முன்பே வரவேற்பை பெற்ற ‘அருவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘அருவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதீதி பாலன் நாயகியாக நடித்திருக்கிறார். அனைவருக்கும் பொருந்தும் சமூக - அரசியல் படமாக ‘அருவி’ உருவாகி இருக்கிறது. முகமது அலி பாய்க் என்ற ஐதராபாத் தியேட்டர் ஆர்டிஸ்ட், திருநங்கை அஞ்சலி வரதன், கன்னட நடிகை லட்சுமி கோபால் சாமி, மதன் உள்பட பலரும்  நடித்துள்ள இந்த படத்திற்கு பிந்து மேனன் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிரலயில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்ற இந்த படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com