அருவா சண்ட

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் `அருவாசண்ட' படத்தின் முன்னோட்டம்.
அருவா சண்ட
Published on

இந்த படத்தில் நாயகனாக ராஜா நடிக்கிறார். மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, காதல் சுகுமார், சரத், அம்பானி சங்கர், ரஞ்சன், சிவசங்கர், தளபதி தினேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து இந்த படத்தின் ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறார். இசை - தரன், ஒளிப்பதிவு - சந்தோஷ் பாண்டி, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை -  சுரேஷ் கல்லேரி ஸ்டன்ட் மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா, ராதிகா, ஸ்டன்ட் - தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - கே.வீரமணி, டிசைன்ஸ் -  சபீர்.   

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆதிராஜன்.

ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படதின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன், ஆடுகளம் நரேனின் மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார்.

படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com