சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்
Published on

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலும் இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 

இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com