அருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான் - அக்னி சிறகுகள் படக்குழு அறிவிப்பு

நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அருண் விஜய்யின் கதாபாத்திரத்தையும் அவரது நியூ லுக்கையும் படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி இப்படத்தில் அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com