அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை

தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் குத்துச்சண்டை நடிகை நடிக்க இருக்கிறார். #Boxer #ArunVijay
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
Published on

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தடம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அடுத்ததாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com