போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி

டைரி படத்திற்காக அருள்நிதி 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்ததாக இயக்குனர் இன்னாசி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அருள்நிதி
அருள்நிதி
Published on: 

வம்சம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருள்நிதி மவுனகுரு, தகராறு, டிமாண்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தொடர்ந்து டைரக்டர்கள் அஜய் ஞானமுத்து, அறிவழகன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கும் படத்தில் நடித்து வந்தார். விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்துக்கு இன்னாசிதான் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு டைரி என்று பெயர் வைத்து இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தலைப்பை டைரக்டர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக சிங்கப்பூரை சேர்ந்த பவித்ரா நடித்துள்ளார். சாரா, ஜெயப்பிரகாஷ், கிஷோர், சாம்ஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரான் ஈத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். 

படம் குறித்து இயக்குனர் இன்னாசி பாண்டியன் கூறும்போது, “டைரி துப்பறியும் திகில் படமாக தயாராகி உள்ளது. அருள்நிதி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார். இதற்காக அவர் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்தார். முழு நீள அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் தொழில் நுட்ப பணிகளை தொடங்கி விரைவில் திரைக்கு கொண்டு வருவோம்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com