ரசிகர்களை ஏமாற்றிய அர்னால்டு

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டெர்மினேட்டர்’ படத்தின் 6ம் பாகம் குறித்த நேரத்தில் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரசிகர்களை ஏமாற்றிய அர்னால்டு
Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. இவரது நடிப்பில் வெளியான ‘டெர்மினேட்டர்’ படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. மனித உருவத்தில் ரோபோ உலகை அழிக்க முயற்சிக்கும் கதையம்சத்தில் எடுக்கப்பட்டது.

அதன்பின் டெர்மினேட்டர் 2-வது பாகம் வெளியானது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

இதனால் டெர்மினேட்டர் படம் எப்போதும் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. இதுவரை டெர்மினேட்டர் படம் 5 பாகங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது அர்னால்டு நடிப்பில் ‘டெர்மினேட்டர்-6’ எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அர்னால்டு மனித உருவத்தில் ரோபோ வேடத்தில் மீண்டும் நடிப்பதால் படம் வெளியாவதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். முதலில் வருகிற ஜூலை 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டெர்மினேட்டர்-6 படம் ரிலீஸ் 3 மாதம் தள்ளி போகிறது.

நடிகர் அர்னால்டு திடீர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் படப்பிடிப்பு தாமதமானதால் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com