2.0 படத்தை கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் மறக்க முடியவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
2.0 படத்தை கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் மறக்க முடியவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்
Published on

ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்‘ என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ‌ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.

படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ‌ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.

ரஜினிகாந்துடன், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. #2Point0 #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com