

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து `பூம் பூம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. `ஆலி ஆலி' என்ற இரண்டாவது பாடல் வருகிற திங்களன்று (செப்டம்பர் 4) வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழில் நாயகனாக அறிமுகம் செய்யும் பிரமாண்ட விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.