அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்

`நிபுணன்' படம் வெளியானதை தொடர்ந்து, அர்ஜுன் தற்போது தனது மகளை இயக்கும் `சொல்லிவிடவா' படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட இருக்கிறார்.
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
Published on

சுஹாசினி, கே.விஸ்வநாத், சதிஷ், யோகி பாபு, அசோக் மந்தனா, போண்டா மணி, மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் பிலிம் இன்டர்நேஷ்னல் மூலம் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேசி கிஃப்ட் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், `சொல்லிவிடவா' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com