விதிமதி உல்டா படத்தை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் விஜய் பாலாஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விதி மதி உல்டா’ படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டி இருக்கிறார்.
விதிமதி உல்டா படத்தை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்
Published on

ரமீஸ் ராஜா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘விதிமதி உல்டா’. இதில் இவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்துள்ளார். மேலும், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக விஜய் பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்த விதி மதி உல்டா படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று பாராட்டி இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com