1 மில்லியனை தொட்ட அனுபமா பரமேஸ்வரன்

மலையாள படமான ‘பிரேமம்’ மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது 1 மில்லியனை தொட்டிருக்கிறார். #AnupamaParameswaran
1 மில்லியனை தொட்ட அனுபமா பரமேஸ்வரன்
Published on

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் பிரேமம். அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

மலையாள நடிகையான இவர் தனுஷ்க்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். இப்படத்திலும் துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இவரது டுவிட்டர் பக்கத்தில் இவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டிருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் தன்னை பின் தொடர்கிறார்களா என்று சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

X

Maalai Malar
www.maalaimalar.com