அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்
Published on

நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்கு படம் நின்னு கோரி. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, ‘கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தேன். அதன்பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது.

நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். எனவே ஒப்பிட வேண்டாம். படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிக்கிறேன். கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த வேடம் எனக்கு பிளஸ்சாக அமையும். சரியான தருணத்தில் எமோ‌ஷனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர் இது. அது புரிந்து நடித்து வருகிறேன்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com