தனுஷின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை

பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், நடிகை அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel
தனுஷின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை
Published on

தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வருகிறார். 

படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

தற்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் தவிர தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel

X

Maalai Malar
www.maalaimalar.com