அண்ணாதுரை

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி - டயனா சாம்பிகா நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தின் முன்னோட்டம்.
அண்ணாதுரை
Published on

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை, படத்தொகுப்பு - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - தில்ரா, கலை - ஆனந்த்மணி, ஸ்டண்ட் - ராஜசேகர், நடனம் - கல்யாண்.

தயாரிப்பு - சரத்குமார், ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி, இயக்கம் - ஸ்ரீனிவாசன். இவர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...

“நட்சத்திர கதாநாயகன் விஜய் ஆண்டனி சாருடனும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடனும் எனது முதல் படத்தில் இணைந்து பணியாற்றுவது பெருமை. மிகப்பெரிய தலைவரான அண்ணாவின் பெயரைக்கொண்ட படம் இது. என்றாலும், அவருடைய வாழ்க்கையை சார்ந்த படமல்ல. விஜய் ஆண்டனி ரசிகர்களையும் மற்ற ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வேறு கதைக்களத்தை கொண்டது.

இதில் விஜய் ஆண்டனி இரண்டு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குடும்பபாங்கான ஜனரஞ்சகமான இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

தெலுங்கில் இந்த படம் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com