

இந்நிலையில், ஜெய்யுடன் இணைந்து ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யா தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாவதாகவும், தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் ஆரத்யா
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி தனது அக்காவுடன் தான் எடுத்த செல்பியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு அக்கா மட்டுமே இருக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.