சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டீசருக்காக அனிருத் தனது பாடலை தள்ளி வைத்திருக்கிறார். #Sivakarthikeyan #Anirudh
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
Published on

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அன்று இரவு 8 மணியளவில் ‘சீமராஜா’ டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது.

முன்னதாக, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் அன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

‘சீமராஜா’ டீசர் வெளியாவதால் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார். இதற்கு “உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அந்த பாடல் நேற்று இரவு தான் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com