படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை - ஆண்ட்ரியா

விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா, படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை என்று கூறியிருக்கிறார். #Andrea #Vishwaroopam2
படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை - ஆண்ட்ரியா
Published on

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’.  கமல் நாயகனாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா ‘முதல் பாகத்தை விட 2 ம் பாகத்தில் தான் நான் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

இந்த படத்தில் நடித்தபிறகு எனக்கு சமூக பொறுப்பு அதிகரித்துள்ளது. படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. கதை பிடித்து இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன். 6 மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

விஸ்வரூபம் 2வும், வடசென்னையும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 2 கதாநாயகிகள் என்று எந்த படத்தையும் ஒதுக்குவதில்லை. கதையில் எனக்கான முக்கியத்துவத்தை தான் பார்க்கிறேன். எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். ஆண்ட்ரியா அடுத்து கா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com