வெற்றிமாறனை நம்பியதால் தற்போது பயமில்லை - ஆண்ட்ரியா

வடசென்னை படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் தற்போது பயமில்லை என்று கூறியிருக்கிறார்.
வெற்றிமாறனை நம்பியதால் தற்போது பயமில்லை - ஆண்ட்ரியா
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் ஆண்ட்ரியா வடசென்னை பெண்ணாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி கூறிய ஆண்ட்ரியா....

“முகதோற்றம், கால்ஷீட் தேதி பார்த்து இயக்குனர்கள் நடிகைகளை தேர்வு செய்வார்கள். ஆனால் வெற்றிமாறன் மிகவும் வித்தியாசமானவர். நடிகர், நடிகைகளை அவர் தேர்வு செய்யும் விதமே தனி.

தனது கதாபாத்திரங்களின் குணாதிசயம் யாரிடம் உள்ளது என்று பார்ப்பார். அதை கண்டு பிடித்துவிட்டால் அவர்களை தனது படத்தில் நடிக்க வைப்பார். தோற்றம் எல்லாம் அதற்கு பிறகுதான்.

வெற்றிமாறன் போல பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது இல்லை. பல நேரம் செட்டில் என்ன நடக்கிறது என்பதே எனக்கு புரியாது. ஆனால் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஒரு கலைஞராக அவரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும்.

‘வடசென்னை’ படத்தில் எப்படி நடிக்கபோகிறேனோ என்று முதலில் பயந்தேன். வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் இப்போது அந்த பயம் இல்லை” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com