கவர்ச்சிக்கு மாறிய ‘நட்பே துணை’ அனகா.... வைரலாகும் புகைப்படங்கள்

நட்பே துணை படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை அனகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அனகா
அனகா
Published on

நடிகை அனகா, மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில்  கதாநாயகியாக அறிமுகமானார்.

அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா. இந்த படத்தில் அனகா, கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com