

விஜய் சேதுபதி - சமந்தா - பகத் பாஷில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காயத்ரி ஷங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அநீதிக்கதைகள் படத்தில் நடிப்பதன் மூலம் ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன், காயத்ரி இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதற்கு முன்னதாக விஜய் சேதுபதியுடன் இணைந்து `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `ரம்மி', `புரியாத புதிர்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் `புரியாத புதிர்' இன்று ரிலீசாகி இருக்கிறது.
இதுதவிர விஜய் சேதுபதியுடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `சீதக்காதி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.