அவருடன் ஆடும் போது பதட்டம் அடைந்தேன் - அமைரா தஸ்தூர்

தனுசுடன் அனேகன் படத்தில் நடிகையாக அறிமுகமான அமைரா தஸ்தூர், அவருடன் ஆடும்போது பதட்டம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார். #AmyraDastur
அவருடன் ஆடும் போது பதட்டம் அடைந்தேன் - அமைரா தஸ்தூர்
Published on

தனுசுடன் அனேகன் படத்தில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். அதன் பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக காதலைத்தேடி நித்யானந்தா படத்தில் நடித்து வருகிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அமைரா நடிக்கிறார். இதுபற்றி அமைரா அளித்துள்ள பேட்டியில் “சைக்காலஜிகல் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதற்கு முன் இது போன்ற படங்கள் நடித்ததில்லை. செக்சியான, அறிவுபூர்வமான கதாபாத்திரம். பிரபுதேவாவின் கதாபாத்திரத்துக்கு ஈடுகொடுத்து நடித்தது சவாலாக இருந்தது. அவருடன் நடனமாடும்போது பதட்டம் அடைந்தேன். அவர் நடனமாடும்போது மொத்த படக்குழுவும், அவரது ஒவ்வொரு அசைவையும் ரசித்து கைதட்டுவார்கள். பிறவி கலைஞன் அவர்.

ஆறு முறை அவருடன் நடனமாடும்போது எனது அசைவுகளை மறந்துவிட்டேன். அவரின் எனர்ஜிக்கு ஈடு கொடுத்து ஆடுவது அசாத்தியமான அனுபவம். அவரின் கெட்அப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் என்னிடம் வந்து பேசும் போதுதான் அடையாளம் கண்டேன்” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com