கன்னட படத்தில் இருந்து விலகிய எமி ஜாக்சன்

சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது விலகி இருக்கிறார்.
கன்னட படத்தில் இருந்து விலகிய எமி ஜாக்சன்
Published on
தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது எமி ஜாக்சன், ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘சூப்பர் கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் டி.வி. ஷோவில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.

இது தவிர சிவராஜ்குமார்-சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ என்ற கன்னட படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் ‘குயின்’ படத்தின் கன்னட ரீமேக் படமான ‘பட்டர்பிளை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது கால்ஷீட் இல்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார் எமி ஜாக்சன்.
X

Maalai Malar
www.maalaimalar.com