‘ஜாஸ்’ சினிமாஸில் இன்றும் காட்சிகள் ரத்து

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதால் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் இரண்டாவது நாளாக இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
‘ஜாஸ்’ சினிமாஸில் இன்றும் காட்சிகள் ரத்து
Published on

இங்கு 12 தியேட்டர்கள் உள்ளன. ஒவ்வொரு தியேட்டரிலும் 1,500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.

நேற்று காலையில் வருமான வரி சோதனை தொடங்கியதை தொடர்ந்து 12 திரைகளிலும் காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தியேட்டரில் முன்பதிவு செய்து விட்டு சினிமா பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அங்கு நேற்று தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நீடித்து இன்று 2-வது நாளாகவும் நீடிக்கிறது.

இதனால் இன்றும் சினிமா காட்சிகள் தடைபட்டுள்ளது. சோதனை தொடர்வதால் இன்றைய காட்சிகளும் ரத்தானது. சோதனை நடக்கும் தகவல் தெரிந்திருந்ததால் இன்று படம் பார்க்கும் எண்ணத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கூடவில்லை. இருப்பினும் தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் சிலர் ஏமாற்றத்துடனேயே திரும்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com