விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
Published on

பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாக சவுரியா, வெரோனிகா அரோரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

`விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபஷ்கரன் தயாரித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலரை நடனப் புயல் பிரபுதேவா வருகிற 18-ஆம் தேதி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஏற்கனவே `கரு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ரை பிரபுதேவா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. `தேவி' படத்தின் மூலம் பிரபுதேவா - ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர். `தேவி' படத்தை தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பிரபு தேவா விஜய் இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com