லாரன்ஸ் இடத்தை பிடித்த அக்‌ஷய் குமார்

லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். #Kanchana #LaaxmiBomb
லாரன்ஸ் இடத்தை பிடித்த அக்‌ஷய் குமார்
Published on

லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்து திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகி விட்டது.

தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com