அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் பிரபல நடிகரான அக்ஷய் குமார் ஷங்கர் இயக்கத்தில் `2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் படத்தில் நடிக்க அக்ஷய் குமார் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
Published on

தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, இளவரசு, அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு தமிழில் கிடைத்த அமோக வரவேற்பினால் தெலுங்கில் `கட்டமராயுடு' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கு ரீமேக்கில் பவண் கல்யாண் - சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக இந்தியிலும் இந்தப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பாலிவுட் இயக்குநர் பர்காத் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு `லேண்ட் ஆஃப் லுங்கி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சாஜித் நாடியாவாலா இந்த படத்தை தயாரிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com