

நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த புயல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. `விவேகம்' டீசர் வெளியாகி தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் யூடியூப்பில் மட்டும் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் `விவேகம்' டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர்.
நேற்று நள்ளிரவு சரியாக 12.01-க்கு வெளியான டீசர், 12 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.
பொதுவாக வெளியிடப்படும் டீசர்களை 12 மணிநேரத்தில் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட அளவீடு ஏதும் இல்லை. இந்நிலையில், `விவேகம்' 12 மணிநேரத்திற்குள் மொத்தமாக 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வெளியான படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான `கபாலி' படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் `கட்டமராயுடு' 57 மணிநேரத்தில் 50 லட்சமும், மூன்றாவது இடத்தில் `பைரவா' 76 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், 12 மணிநேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று `விவேகம்' புதிய சாதனை படைத்திருக்கிறது.