வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்- இயக்குனர் நவீனுடன் மீராமிதுன் மோதல்

அக்னி சிறகுகள் படத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகை மீராமிதுன் இயக்குனர் நவீனுடன் டுவிட்டரில் காரசார விவாதம் நடத்தியுள்ளார்.
நவீன், மீராமிதுன்
நவீன், மீராமிதுன்
Published on

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கி பிரபலமான நவீன் இயக்குகிறார். கதாநாயகியாக மீரா மிதுனை ஒப்பந்தம் செய்ததாகவும், பிறகு அவரை நீக்கி விட்டு அக்‌ஷரா ஹாசனை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் பரவியது.

இதனை மீராமிதுனும் உறுதிப்படுத்தி படக்குழுவை சாடினார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த இயக்குனர் நவீன், “அக்னி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத்தான் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். மீரா மிதுனை நாயகியாக ஒப்பந்தம் செய்யவில்லை. எனக்கு தெரியாமலேயே படத்தில் நடிப்பதாக அவர் சொல்லி வருகிறார்” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மீரா மிதுன், “ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு என்னிடம் சில காட்சிகளை காட்டி பேசினீர்களே மறந்து விட்டதா?. தொடர்ச்சியாக பொய் சொன்னால் என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன். நீங்கள் ஒரு பொய்யர். ஞாபக மறதி நோய்க்காக மருத்துவரை பாருங்கள்.

உங்களுக்கும் எனக்கும் படம் தொடர்பாக நடந்த உரையாடல் இருக்கிறது. அதை வெளியிட்டால் உங்கள் குடும்ப பெண்களையும் பாதிக்கும் அதை வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளதா?” என்றார்.

இதற்கு பதில் அளித்த நவீன், “உங்களுக்குத்தான் பிரச்சினை உள்ளது. எனவே மருத்துவரை பாருங்கள்” என்றார். இவர்கள் மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுபிள்ளை படத்தில் நடித்த தனது காட்சிகளை நீக்கி விட்டதாகவும் மீராமிதுன் குற்றம்சாட்டி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com