விஷாலை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்த நிலையில், அடுத்ததாக விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். #Kolaikaran #VijayAntony #Arjun
விஷாலை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்
Published on

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர். 

காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், திருடன் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kolaikaran #VijayAntony #Arjun

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com