ஜி.வி.பிரகாஷ் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் அதிதி ராவ்

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
ஜி.வி.பிரகாஷ் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் அதிதி ராவ்
Published on

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari

X

Maalai Malar
www.maalaimalar.com