பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை

பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில், சிம்புவுடன் நடனம் ஆடிய நடிகை பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
Published on

2002-ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு நடிப்பில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக மீண்டும் ஷக்தி சிதம்பரம், பிரபு தேவா, பிரபு மூவரும் இணைந்துள்ளனர். இதில் நிக்கி கல்ராணி, அடா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இதற்கு சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை அடா ஷர்மா பாடியிருக்கிறார். அடா ஷர்மா பாடியுள்ள முதல் பாடல் இதுதானாம். அடா ஷர்மா இதற்கு முன் சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘மாமா வெயிட்டிங்...’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com