போலீசாக ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை சோனா

போலீசாக ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை சோனா

சில வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை சோனா தற்போது உடல் எடையைக் குறைத்து, மீண்டும் நடிக்க வருகிறார்.
Published on
'பத்துக்கு பத்து', 'குரு என் ஆளு', 'குசேலன்', 'கோ' உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இவர் ஜெய் நடிப்பில் 'கனிமொழி' என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார். மலையாள சினிமாவிலும் பிரபலமானவர் சோனா. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகியவர் உடம்பு முழுக்க காவிச் சேலையைச் சுற்றிக்கொண்டு ஆன்மீக வடிவுக்கு மாறினார். தனது பெயரையும் தேவி சோனா என மாற்றிக்கொண்டதாகக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்காக தனது உடல் எடையை 7 கிலோ குறைத்திருக்கிறார் சோனா. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சோனா போலீஸாக நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாகத் தயாராகிறது. புது இயக்குனர் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சோனா சண்டைப் பயிற்சிகளையும் கற்றுவருகிறாராம்.
X

Maalai Malar
www.maalaimalar.com