நடிகை மேக்னா - கன்னட நடிகர் காதல் திருமணம்

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேக்னா, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. #Mekna
நடிகை மேக்னா - கன்னட நடிகர் காதல் திருமணம்
Published on

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேக்னா. தொடர்ந்து ‘நந்தா நந்திதா’, ‘உயர்திரு 420’, ‘கிருஷ்ண லீலை’ படங்களில் நடித்தார். இவர் முன்னாள் மலையாள நடிகை பிரமிளா ஜோஷி - கன்னட நடிகர் சுந்தர் ஆகியோரின் மகள்.

மேக்னா மலையாளத்திலும், சில படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும், கன்னடத்தில்தான் ஏராளமான படங்களில் நடித்து பிசி நடிகை ஆனார். கன்னட படங்களில் இவருடன் நடித்த சிரஞ்சீவி சார்ஜாவுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இவர் பிரபல கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகன்.

மேக்னா - சிரஞ்சீவி சார்ஜா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மேக்னா - சிரஞ்சீவி சார்ஜா நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் வருகிற மே மாதம் 2-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. இதில் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் துருவா சார்ஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார். #Mekna

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com