முதலையுடன் மோதும் கன்னித்தீவு நாயகிகள்

சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
முதலையுடன் மோதும் கன்னித்தீவு நாயகிகள்
Published on

த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.

முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com