மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துள்ளார்
மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
Published on: 

மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியதாக படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.துறைக்கு வரத் தூண்டிய ஒருவரிடமிருந்து பாராட்டு கிடைத்ததில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, நடிகருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

உங்களைப் போல ஒரு பொழுதுபோக்குக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்தான் நான் சென்னைக்கு வந்தேன்.பெரிய கனவுகளைக் காணவும், திரைப்படத் துறையில் பயணிக்கவும் எனக்கு உத்வேகம் அளித்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்று எனக்கென ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதற்காக உங்களிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணம்.இந்த அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளாஎர். மேலும் எனது குழுவினரும் நானும் பெற்ற பாராட்டுக்களிலேயே மிகவும் மகிழ்ச்சியுட்டும் பாராட்டுகளில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, எங்கள் படைப்பு மக்களைச் சென்றடைவதையும், நாங்கள் பெரிதும் மதிக்கும் ஒருவரிடமிருந்து அதற்கான அன்பைப் பெறுவதையும் காண்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறெதுவும் இல்லை. இந்தப் புகைப்படம் என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் ஒரு நினைவாக அமையும். அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்

படத்தில் கதைநாயகன் மருதநாயகம் மற்றும் முத்துச்செல்வி ஆகியோருக்கு எதிர்பாராத சூழலில் விரும்பாத திருமணம் நடக்கிறது. ஒரே இரவில் நடக்கும் சுவாரசியமான திருப்பங்கள் மற்றும் குழப்பங்களை மையமாகக் கொண்டு நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட இத்திரைப்ப்டம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைம் பெற்றிருந்தது. குறிப்பாக திரைபிரபலங்கள் பலரும் நேரில் அழைத்து படக்குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com