சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர் நானி

தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் நானி, கார் விபத்தில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.
சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர் நானி
Published on

தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் ‘வெப்பம்’, ‘ஆஹா கல்யாணம்’, ‘நான் ஈ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடித்தாலும், தெலுங்கில் பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘எம்.சி.ஏ’ எனும் தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மெர்லபாக காந்தி இயக்கும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் நானி பயணித்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்தானது. சிறு காயங்களுடன் நானியும், அவரது டிரைவரும் உயிர் தப்பி இருக்கிறார்கள். இது குறித்து நானி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com