30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி? ரகசியத்தை அறியும் ஆவலில் அட்டகத்தி தினேஷ்

30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி? என நடிகர் தினேஷ் கற்றுக் கொண்டு வரும் `அண்ணனுக்கு ஜே' படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி? ரகசியத்தை அறியும் ஆவலில் அட்டகத்தி தினேஷ்
Published on

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் `கபாலி'. அதன் பிறகு தினேஷ் தற்போது `உள்குத்து', `மெர்லின்', `அண்ணனுக்கு ஜே', `வாராயோ வெண்ணிலாவே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் `அண்ணனுக்கு ஜே' படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராஜ்குமார் இயக்கி வரும் இந்த படத்தை வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரித்து வருகிறார்.

அரோல் கொரேலி இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com