ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் - தர்ஷன்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் மூலம் ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் என்று படத்தில் நடித்துள்ள தர்ஷன் கூறினார். #Kanaa #AishwaryaRajesh #Darshan
ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் - தர்ஷன்
Published on

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், முனீஷ்காந்த், நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமாகும் தர்ஷன் படம் பற்றி கூறும்போது,

என்னுடைய கனவு `கனா' படம் மூலம் நனவாகியிருக்கிறது. அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது. எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டாகியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். கனா (கனவு) ஒரு பொதுவான உணர்வு, அல்லவா? எனக்கு மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் படத்துடன் ஒரு வகையான பிணைப்பு இருந்தது. ரசிகர்கள் அவர்களுடைய சொந்த கனவு திரையில் பிரதிபலித்திருப்பதாக உணர்வார்கள்.

விருதுகள் மற்றும் பாராட்டுக்களை தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் கௌசல்யாவாக எல்லோர் மனதிலும் நிற்பார். சத்யராஜ் சாரின் சிறிய அமைதியான நடிப்பு கூட பேச முடியாத வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும் என்றார். #Kanaa #AishwaryaRajesh #Darshan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com