லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் - நாயகி

லிப்-லாக் காட்சியின் போது ‘கட்’ சொல்லியும் நாயகன் - நாயகி இருவரும் பிரியாமல் முத்தம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் - நாயகி
Published on

இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ ஜென்டில்மேன்’ படத்திலும் சித்தார்த் - ஜாக்குலின் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி உள்ளது.

இந்த முத்தக்காட்சி படமான போது டைரக்டர் ‘கட்’ சொன்ன பிறகும் இருவரும் பிரியவில்லை. காட்சியோடு ஒன்றி விட்டார்கள். நீண்ட நேரத்துக்குப்பிறகே சித்தார்த்தும் ஜாக்குலினும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த படத்தில் முத்தக்காட்சி இருப்பதாலும், நெருக்கமான காட்சிகள் அதிகமாக உள்ளதாலும் உதடு சேர்க்கும் முத்தக்காட்சியை வெட்டும்படி சென்சார் போர்டு கூறியுள்ளது. ஆனால் அதற்கு காரணம் சொல்லி ‘கட்’ இல்லாமல் தப்பிவிட்டார்கள்.

இந்த படத்தில் வரும் முத்தக்காட்சியில் ஜாக்குலின் மிகவும் ஒன்றி நடித்தார். அந்த காட்சியில் நடித்து முடிப்பதற்குள் அவருடைய உதடுகள் வெளுத்து விட்டன என்று செய்திகள் வெளியாகின.

இதுபற்றி கூறிய நாயகன் சித்தார்த் மல்கோத்ரா “இதில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சியில் ஆபாசம் எதுவும் இல்லை. அதற்கு கத்திரி போடவும் இல்லை. படம் பார்த்தால் அது தெரியும்” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com