அடுத்த படத்திற்காக தமிழ் பேசும் அமிதாப் பச்சன், அமீர் கான்

விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமீர் கான் இணைந்து நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் புரமோஷனுக்காக தமிழில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan
அடுத்த படத்திற்காக தமிழ் பேசும் அமிதாப் பச்சன், அமீர் கான்
Published on

யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் இந்தியில் உருவாகி இருக்கும் படம் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியிருக்கும் இந்த படத்தில் அமீர் கான் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தின் மூலம் அமீர்கானும், அமிதாப்பச்சனும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார். அவரது முதல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 

கத்ரினா கைப், பாத்திமா சனா சேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரூ.210 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்தியில் ரிலீசாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான புரமோஷன் வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கில் பேசியுள்ளனர். #ThugsofHindostan #AamirKhan #AmitabhBachchan

X

Maalai Malar
www.maalaimalar.com