மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி

`த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
Published on

அந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக், சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சனங்களுக்கிடையே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை மீண்டும் இயக்க இருக்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் சோனியா அகர்வால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com