நடிகர்களுக்கு சம்பள பாக்கி - நடிகர் சங்க புகாருக்கு 96 படத் தயாரிப்பாளர் விளக்கம்

96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகர் சங்கம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து எஸ்.நந்தகோபால் விளக்கம் அளித்துள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil
நடிகர்களுக்கு சம்பள பாக்கி - நடிகர் சங்க புகாருக்கு 96 படத் தயாரிப்பாளர் விளக்கம்
Published on

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தை தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர் தனது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் விஷால் நடித்த கத்தி சண்டை, விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த படங்களில் நடித்துள்ள விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்து இருப்பதாகவும், இனிமேல் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகர்-நடிகைகள் நடிக்க கூடாது என்றும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அதற்கு பதில் அளித்து நந்தகோபால் கூறியதாவது,

கத்தி சண்டை படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மனசாட்சிபடி செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு ஊதியத்தையும் வழங்கி விட்டேன்.

இந்த நிலையில் எனது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் நடிகர் சங்க நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. எனக்கு எதிரான இந்த அறிக்கையை சிலர் வேண்டுமென்றே அனுப்பி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) உரிய முடிவை எடுக்க வேண்டும். அதற்கு கட்டுப்படுவேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் தொழில் செய்ய விடாமல் என்னை தடுப்பதாக டெல்லியில் உள்ள இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் புகார் செய்வேன்.

இவ்வாறு கூறியுள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil #SNanadgopal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com