96

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
96
Published on

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேதா, உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.

இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி பிரேம்குமார் கூறும் போது, 

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்துவிட்டது. விஜய்சேதுபதி இந்த படத்தில் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். 

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார். படம் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha

X

Maalai Malar
www.maalaimalar.com